Friday, August 28, 2009

கொலுவோ கொலு....


ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இதோ என் முதல் தமிழ் பதிவு (வடிவேலு பாஷையில் ''முடியல'' சொல்றது காதில் விழுகிறது)
Statutory Warning: naan appo appo pesara thamizhla ezhudi irukken, so spelling mistakes parthutu correction sonna kadi ayiduven (kidding, I will be a sport...well, mostly :D ) and since I assume ''எம் தாய் மொழியை யாம் நன்கே அறிவோம் !'', here goes.....

வீட்டில் நடக்க கூட இடம் இல்லாத அளவிற்கு படி கட்டி ஒரு நாள் முழுவதும் கொலு வைத்ததும் உண்டு...
இடப்பற்றகுறையை காரணம் காட்டி 5 படிகள் கொண்ட showcaseல் பொம்மையை அடிக்கியதும் உண்டு...

மண் கொட்டி, செடிகள் நட்டு, மிருக பொம்மைகள் வைத்து park கட்டியதும் உண்டு...
மாக்கோலம், பூக்கோலம், தோரணம் என்று அலங்காரம் பண்ணியதும் உண்டு....
showcase கொலுவிற்கு கலர் பேப்பர் கட்டி twinkling lights போட்டதும் உண்டு....

கண்ணாடி குங்குமச்சிமிழ் சீப்பு வாங்க T-Nagar ரங்கநாதன் தெருவில் அலைந்ததும் உண்டு....
மாமிகளுக்காக கூடை கூடையாக blouse bit தூக்கி வந்ததும் உண்டு....
அதில் யாருக்கு என்ன கலர் குடுப்பது என்று மணி கணக்கில் யோசித்ததும் உண்டு...

அப்பா மூட்டை மூட்டையாக தேங்காய் வாங்கியதும் உண்டு...
அம்மா ஆளுக்கு ஒன்று என்று பங்கு பிரித்ததும் உண்டு...
ஏற்கனவே தேங்காய் பெற்றவர்கள் பெறாதவர்குளடன் வந்து விட்டால் அதை master strategy உபயோக படுத்தி சமாளித்ததும் உண்டு....

வெற்றிலை பாக்கு செட் செட்டாக எடுத்து வைத்ததும் உண்டு....
சுண்டல் மடிக்க பழைய Hindu பேப்பரை கிழித்து வைத்ததும் உண்டு...
''நன்னா பொட்டலம் கட்டிற்கியே'' என்று வந்திருக்கும் மாமியிடம் Certificate வாங்கியதும் உண்டு...
அதே சுண்டலை Ziplock கவரில் போட்டு குடுத்ததும் உண்டு....

வெள்ளி கிழமை என்றால் ''புட்டு'' உண்டு......
எனக்கு புட்டு ரொம்ப பிடிக்கும் என்பதால் அன்றைய தினம் மாமிகள் கூட்டம் கம்மியாக வர வேண்டுமே என்று ஸ்வாமீயிடம் வேண்டியதும் உண்டு....
வந்த மாமிகளுக்கு இரண்டே இரண்டு ஸ்பூன் புட்டு பொட்டலம் கட்டி குடுத்ததும் உண்டு....

நன்றாக சமைக்க தெரிந்த மாமிகள் வீட்டிற்கு தினமும் collectionகாக போனதும் உண்டு....
வெந்ததும் வேகாததுமாக சுண்டல் செய்யும் மாமிகள் வீட்டில் ஒரே ஒரு நாள் தலையை காமித்து விட்டு ஓடி வந்ததும் உண்டு...

அம்மா அழைக்க சொல்லி கொடுத்ததை மனப்பாடம் பண்ணியதும் உண்டு.....
அதை மறக்காமல் ''எங்க ஆத்துல கொலு வெச்சுருக்கோம், வெத்தல பாக்கு வாங்கிக வாங்கோ'' என்று மழலையாக சொன்னதும் உண்டு....

தாத்தாவிடம் நவராத்திரிக்கு அம்மன் பாட்டு கற்றதும் உண்டு.....
அப்படி கற்ற ஒன்று இரண்டு பாடல்களை மாற்றி மாற்றி எல்லார் வீட்டிலும் பாடியதும் உண்டு....
முன்பு பாடிய வீட்டிலிருந்து யாரவது வந்து விட்டால், அவர்கள் போகும் வரை காத்திருந்து அதே பாடலை பாடியதும் உண்டு...
ஸ்ருதி பெசகாமல் பாட வேண்டுமே என்று பயந்ததும் உண்டு...
அப்படி பாடி விட்டால் இன்னொரு பாட்டு பாட சொல்வார்களோ என்று நினைத்தும் உண்டு...
பாடுகிற போது அந்த வீட்டின் வானர கூட்டம் ஜாடை காட்டி கேலி செய்ததும் உண்டு....
போனால் போகட்டும் என்று கடைசியில் அந்த கூட்டத்தை பார்த்து ஒரு புன்சிரிப்பு உதிர்த்ததும் உண்டு....

குழந்தை கிருஷ்ணராக வேடம் இட்டதும் உண்டு....
ஊசிமணி பாசிமணி குரத்தியாக குதித்ததும் உண்டு....
மடிசார் மாமியாக கரண்டியுடன் சென்றதும் உண்டு....
அந்த மடிசார் கழண்டு அதை கையில் பிடித்து கொண்டு அவசரமாக திரும்பியதும் உண்டு....
முதல் முறையாக தாவணி போட்ட உற்சாகத்தில் அந்த வருட கொலுவுக்கு நாள் ஒரு மேனி பொழுது ஒரு வண்ணமாக வித விதமாக பட்டு பாவடை தாவணி போட்டதும் உண்டு......
அதற்கு அடுத்த வருடம் நவராத்திரிக்கு அவைகள் எல்லாம் பீரோவில்தூங்கியதும் உண்டு.....
பாட்டியின் பட்டு புடவையை கட்டியதும் உண்டு....
அதை பார்த்து தாத்தா ''ஆஹா என் பேத்தி வளர்ந்து விட்டாள்'' என்று பூரித்ததும் உண்டு....

அம்மாவுடன் காலையில் தூக்க கலகத்தோடு ஸ்லோகம் சொன்னதும் உண்டு...
அம்மன் அலங்காரம் பார்க்க சாயங்காலம் தெருகோடி கோயிலுக்கு சென்றதும் உண்டு...

சரஸ்வதி பூஜை அன்று ''அப்பாடி படிக்க வேண்டாம்'' என்று எல்லா பள்ளி கூட புத்தகத்தையும் பூஜையில் வைத்ததும் உண்டு...
கல்லூரி பரீட்சை அடுத்த நாள் என்பதால் பூஜை அன்றும் பரபரப்பாக படித்ததும் உண்டு....

விஜயதசமி அன்று புது சைக்கிள் ஒட்டியதும் உண்டு....
அன்றே விழுந்து வாறி அப்பாவிடம் திட்டு வாங்கியதும் உண்டு...
விஜயதசமி அன்று Hindi Class சேர்ந்ததும் உண்டு....
Visharat பரீட்சைக்கு படிக்கும் பொழுது ஏன்டா சேர்ந்தோம் என்று நொந்து கொண்டதும் உண்டு...

கொலு முடிந்தவுடன் பொம்மைகளை பார்த்து பார்த்து பேப்பரில் சுற்றி பரண் மீது வைத்தும் உண்டு...
showcase கதவை மூடி அதுத்த கொலுவிற்கு பார்த்து கொள்ளலாம் என்று விட்டதும் உண்டு....

இன்று நான் இருக்கும் இடத்தில் கொலு இல்லை....அதை கொண்டாட நேரமும் இல்லை, மக்களும் இல்லை, ஆனால்.....
....இப்பொழுதும் நினைத்து நினைத்து மகிழும் நினைவுகள் உண்டு....ஞாபகங்கள் உண்டு....
Hit Counter
Website Hit Counter I had decided to have a counter only after I hit a 1000 views and since it happened last week (as on 14 Dec 2009), now is the time to see some stats :)